மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுஜா என்பவர், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது 3 வயது மகள் பொட்டுவை விட்டுச்செல்ல இடம் இல்லாததால், குழந்தையை அழைத்துக் கொண்டு, சுஜா தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார். குப்பை அள்ளும் தள்ளுவண்டியில், குப்பைக் கூடையில் குழந்தையை அமர வைத்து எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, சுஜா தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்தது, காண்போரை பதற வைப்பதாக அமைந்துள்ளது.
கரோனா பரவல் காலத்திலும் தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் இருக்கும் மாநகராட்சியின் அவல நிலையை எடுத்துக் காட்டுவதாக இச்செயல் அமைந்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் கேட்டபோது, "இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். தூய்மைப் பணியில் ஈடுபடும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளைப் பாதுகாப்பாக விட்டுச் செல்ல திருப்பூரிலுள்ள நான்கு மண்டலங்களிலும் சிறப்பு காப்பகம் அமைக்கப்படும். அங்கு அவர்களின் குழந்தைகள் சிறப்புக்காகப் பராமரிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டி தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை!