ETV Bharat / state

விவசாயிகள் விரோத கருப்புச் சட்டங்களை குடியரசுத் தலைவர் திருப்பு அனுப்ப வேண்டும்! - Farmers Leader P.R.Pandiyan

இந்திய விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக்கும் மத்திய அரசின் அவசர சட்ட முன்வடிவுகளுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாதென தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகள் விரோத கருப்புச் சட்டங்களை குடியரசுத் தலைவர் திருப்பு அனுப்ப வேண்டும்!
author img

By

Published : Sep 21, 2020, 6:37 PM IST

திருவாரூர்: இந்திய விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக்கும் மத்திய அரசின் அவசர சட்ட முன்வடிவுகளுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாதென தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மத்திய அரசு விவசாயத்திற்கு நன்மை பயக்கும் சட்டங்கள் என சொல்லி, முழுக்க முழுக்க விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு எதிரான கருப்பு சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள வேளாண்குடி மக்களை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்க முடிவெடுத்துள்ளது. எனவே, இச் சட்ட முன்வடிவுகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இந்தியா முழுவதும் தடையற்ற வர்த்தகம் என்ற பெயரில் ஆன்லைன் டிரேட் எனும் இணைய சந்தை வணிகம் அனுமதிக்கப்பட்டதால் குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) நிர்ணயம் செய்வதும், அதனை உறுதிப்படுத்துவதும் யார்? கிடங்குகளில் இருப்பு வைக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டாலோ, பேரிடர் காலத்தில் மாநிலங்களில் உணவு பொருள் தேவை ஏற்படின் பதுக்கலை வெளிக்கொண்டு வர மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டா?

ஒப்பந்த சாகுபடி முறையில் கடந்த காலத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால் மாநில அரசுகள் தான் விவசாயிகளுடனும், வியாபாரிகளிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்திருக்கிறோம். தற்போதைய இந்த புதிய சட்டங்களில் இந்நிலையில் சாத்தியமாகுமா ?

சந்தைப்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்குமா? மத்திய அரசு தனக்குத் தேவையான விவசாய விலை பொருள்களை உணவுக் கழகம் மூலம் கொள்முதல் செய்வதற்கான கொள்கை தொடருமா? தமிழ்நாடு அரசு மத்திய அரசின் (FCI) முகவராக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவது இனி தொடருமா? என இப்படியாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இவை குறித்து மத்திய மாநில அரசுகள் தெளிவுப்படுத்த வேண்டும்.

கொள்முதல் நடைமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்போது இச்சட்டம் குறித்து உடனடியாக மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி மாற்று கருத்துக்களை அறிந்து விவசாயிகள் நலன் கருதி தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்.

மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை கேட்டு தீர்வு காண முயற்சிக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தி, மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டுள்ளது என்பதே அவர்களின் செயல்பாடுகள் மூலமாக நாம அறியமுடிகிறது.

ஜனநாயக விரோதமான இத்தகைய செயல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்நிலையில் குடியரசு தலைவர், இச்சட்டத்திற்கு அனுமதி அளிக்கும் முன் விவசாயிகளுக்கான பாதிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு அறிவுரை வழங்க வேண்டும். அதனை பிரதமர் மோடி மறுக்கும் பட்சத்தில் அந்த மூன்று மசோதாக்களையும் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்.

அத்துடன், மாநில அரசுகளின் கருத்தை அறிந்து உரிய மாற்றங்களுடன் மீண்டும் நாடாளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்த பிரதமருக்கு உத்தரவிட வேண்டும் என, குடியரசுத் தலைவரிடம், தமிழக அனைத்து விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்" என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.