ETV Bharat / state

கடலூர் மாவட்ட தொகுதிகளின் தேர்தல் 2021 எதிர்பார்ப்பும் களநிலவரமும் - cuddalore district watch

அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தில் இருந்து கடந்த 1993ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட மாவட்டம் கடலூர். இயற்கையாகவே துறைமுகத்துக்கான அமைப்பைக் கொண்டிருந்ததால், இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் துறைமுகமாகவும், அவர்களின் முதல் தலைநகரமாகவும் கடலூர் விளங்கியது. மலைகளோ, மலைத்தடுப்புகளோ இல்லாத இம்மாவட்டம், வருடம் தோறும் இயற்கை சீற்றத்தால் அதிகம் பாதிப்பைச் சந்திக்கிறது.

cuddalore district watch
கடலூர் தொகுதிகள் வலம்
author img

By

Published : Mar 19, 2021, 12:19 PM IST

Updated : Aug 12, 2022, 8:25 PM IST

வாசல்:

கடலூர் மாவட்டம் ஒரு தனித் தொகுதி உட்பட இரண்டு மக்களவைத் தொகுதிகளையும், திட்டக்குடி (தனி), விருதாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி) என, ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

தொகுதிகள் உலா:

திட்டக்குடி: மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாக இருக்கிறது திட்டக்குடி தொகுதி. தொகுதியின் பிரதானத் தொழில் மானாவாரி விவசாயம். இந்தத் தொகுதியில் உள்ள வெலிங்டன் ஏரி தூர்வாரப்படாமல் இருப்பதால் அதிகம் நீரைத் தேக்க முடியாமல் இந்தப் பகுதியின் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனைத் தூர்வார வேண்டும் என்கின்றனர் தொகுதிவாசிகள்.

விருத்தாச்சலம்: தமிழ்நாட்டின் பெரிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தைக் கொண்டுள்ள தொகுதி இது. பிரதானத் தொழில் விவசாயம். இத்தொகுதிக்குட்பட்ட பகுதியில் வெள்ளைக் களிமண் அதிகம் கிடைப்பதால், இங்கு பீங்கான் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. பீங்கான் தொழில் நுட்பக்கல்லூரி ஒன்றும் அமைந்துள்ளது.

இக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் புதுமைகள் எதுவும் புகுத்தப்படவில்லை. கல்லூரியிலும் குறைவான அளவிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதனால் இந்தத் தொழில் நலிவடைந்து வருகிறது. இங்கு ஓடும் மணிமுத்தாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

நெய்வேலி: தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கி வரும், மத்திய அரசின் என்எல்சி பொதுத்துறை நிறுவனம் உள்ள தொகுதி. செம்மண் பகுதியான இங்கு பெருமளவில் முந்திரி சாகுபடி நடைபெறுகிறது. பலாப்பழ விளைச்சலும், அதிகளவில் நடைபெறுகிறது. நெய்வேலியில் முந்திரி ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும்.

முந்திரி பழத்திலிருந்து பழச்சாறு தயாரிக்க வேண்டும், பலாப்பழத்தை மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்றும் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய வேலை, வசிக்க வீடுகள் இன்னும் வழங்கப்படவில்லை போன்ற குறைகள் தொகுதியில் நீடிக்கின்றன.

பண்ருட்டி: மாவட்டத்தில் வர்த்தகத்திற்கும், பலா, முந்திரி விளைச்சலுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது இந்தத் தொகுதி. கெடிலம், மலட்டாறு, தென்பெண்ணை ஆறு ஓடும் தொகுதி என்பதால், நீர்வளமும், நிலவளமும் கொண்டுள்ளது. கரும்பு விவசாயமும், தொகுதியில் கரும்புக்கு உரிய விலை கிடைக்காததால் அடிக்கடி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும், ஏற்றுமதி மண்டலம் கொண்டு வர வேண்டும், முந்திரிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அப்படியே தொடர்கின்றன.

கடலூர்: வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அதிகம் கொண்டுள்ள கடலூர் தொகுதியில் விவசாயமும், மீன்பிடிப்பும் பிரதான தொழிலாக இருக்கிறது. தொழில்துறை அமைச்சரின் தொகுதியான கடலூரில் வளர்ச்சித் திட்டங்கள் பெருமளவில் இல்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம் இன்னும் முடிவடையவில்லை. கடலூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது.

கடற்கரையை ஒட்டியப் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும், சிறிய துறைமுகம் கொண்டுவரப்பட்டு ஏற்றுமதி இறக்குமதி தளம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு இன்றும் அறிவிப்பாகவே தொடர்கிறது. அடிக்கடி இயற்கை சீற்றத்தில் சிக்கித்தவிக்கும் கடலூரில் அதற்கான நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குறிஞ்சிப்பாடி: மாவட்டத்தில் சிப்காட் பகுதி அமைந்துள்ள தொகுதி. இத்தொகுதியில் உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் முந்திரி, வாழை போன்றவைப் பயிரிடப்படுகின்றன. சிப்காட் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலந்து மீனவர்களின் வாழ்வாதாரமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு, சுவாசக்கோளாறு ஏற்படுவதாக குற்றசாட்டுகள் உள்ளன. சிப்காட் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும் தொகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

புவனகிரி: மாவட்டத்தில் அதிக வாக்களர்களைக் கொண்ட தொகுதி. இத்தொகுதியில் மல்லிகைப்பூ, வெட்டி வேர் அதிகளவில் பயிரிடப்படுகிறன. இதனால் ஒரு வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பது இந்தத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

தேர்தல் தோறும் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டு, இன்று வரை வாக்குறுதியாகவே தொடர்கிறது. இந்தப் பகுதியிலுள்ள வெள்ளாற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, கடல்நீர் உட்புகுவதைத் தடுக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

சிதம்பரம்: மாவட்டத்தின் சிறிய தொகுதி சிதம்பரம். ஐந்து சபைகளில் பொன்னம்பலமான நடராஜர் கோயிலும், பிச்சாவரம் சதுப்புநிலக்காடும் அமைந்துள்ள தொகுதி. இங்கு சரியான சுற்றுலா வளர்ச்சித் திட்டம் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவில் இல்லை.

முறையான சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டால், பிச்சாவரம், எம்ஜிஆர் திட்டு, போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து, அது சார்ந்த பொருளாதாரம் உயரும் என்கிறனர் தொகுதிவாசிகள்.

காட்டுமன்னார்கோயில் (தனி) : மாவட்டத்தில் உள்ள இரண்டாவது தனித் தொகுதி இது. இங்குள்ள வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் தேவைக்காக, சென்னைக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தத் தொகுதியில் நெல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நெல்லுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

வீராணம் ஏரியில் உள்ள 32 கால்வாய்கள் தூர்வாரப்படாததால், மழைக்காலங்களில் வெளியேற்றப்படும் தண்ணீர் பல்வேறு கிராமங்களில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதனால் வாய்கால்களைத் தூர்வார வேண்டும். சென்னையின் குடிநீர் தேவைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், உள்ளூர் விவசாயத்திற்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்கின்றனர் தொகுதிவாசிகள்.

களநிலவரம்:

இயற்கையாக அமைந்த அரண்கள் ஏதும் இல்லாதது கடலூர் மாவட்டம். சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களின் வடிகால் நிலமாக அமைந்துள்ள கடலூர் வருடத்திற்கு ஒரு இயற்கை பேரழிவைச் சந்திக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண எந்தத் திட்டங்களும் இல்லை. மாவட்டத்தில் பலா முந்திரி அதிகம் விளைவதால், அவற்றை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்ற தொழிற்சாலைகள் இல்லை.

பாதாளச் சாக்கடை திட்டத்தில் தாமதம், குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல், சுற்றுலாத் திட்டங்களை மேம்படுத்துவது என, கடலூரில் தீர்க்கப்பட வேண்டியவை ஏராளமாகவுள்ளன. மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஐந்து அதிமுக வசமும், நான்கு திமுகவின் வசமும் உள்ளன.

மாவட்டத்தில் தொழில் துறை அமைச்சரின் தொகுதியில் கூட வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படாததும், பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் மாவட்டத்தின் எந்த பெரிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படாததும், மக்கள் மத்தியில் அதிமுகவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி திமுக கூட்டணியை தேர்தல் போட்டியில் கொஞ்சம் முன்னணியில் வைத்திருக்கிறது.

Last Updated : Aug 12, 2022, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.