பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டம் 95.37 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது.
இது குறித்து கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா,
'தனியார் அமைப்புகள் மூலமாக மாணவர்களுக்கு தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டதே தேர்ச்சி விழுக்காடு அதிகரிக்கக் காரணம்.
மேலும் இந்த ஆண்டும் தியானப் பயிற்சிகள் கொடுக்கும் பட்சத்தில் தேர்ச்சி விழுக்காடு மேலும் அதிகரிக்கும்' எனத் தெரிவித்தார்.