உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ரா கிராமத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு பல மாநில மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (அக்.2) திருப்பூர் மாநகராட்சிக்கு எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 19 வயது இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: தொடரும் அவலம்: உ.பி.-யில் 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை!