ETV Bharat / state

அரசு பேருந்து டயரில் சிக்கி பெண் உயிரிழப்பு: பதற வைக்கும் சிசிடிவி காட்சி

திருப்பூர்: அரசு பேருந்து டயரில் சிக்கி பெண் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பதற வைக்கும் சிசிடிவி காட்சி
பதற வைக்கும் சிசிடிவி காட்சி
author img

By

Published : Jan 9, 2021, 6:42 AM IST

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள் மாசித், சுருதி (25) தம்பதி. இவர்களுக்கு ஆதிரா என்ற பெண் குழந்தை உள்ளது.

இவர்கள் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சுருதி தனது குழந்தையுடன் அவரது அம்மா சந்திரிகாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு துணி வாங்க சென்றார். பின்னர் இவர்கள் வீடு திரும்பிபோது திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அருகே அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

பதற வைக்கும் சிசிடிவி காட்சி

இந்த விபத்தில் சந்திரிகா பேருந்து டயரில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக சுருதியும், குழந்தையும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். உடனே சக வாகன ஓட்டிகள் சந்திரிகாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அசால்ட்டாக செயினை பறிக்கும் அடையாளம் தெரியாத நபர்கள்: சிசிடிவி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.