ETV Bharat / state

வீடியோ: உடுமலைப்பேட்டை மருத்துவமனையில் உடற்கூராய்விற்கு லஞ்சம் பெற்ற ஊழியர்

திருப்பூர்: உடுமலையில் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட கணவன், மனைவி இருவரின் உடலை உடற்கூராய்வு செய்ய அரசு மருத்துவமனை ஊழியர் லஞ்சம் பெற்றது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

udamali hospital bribery viral video
வீடியோ: உடுமலைப்பேட்டை மருத்துவமனயில் உடற்கூராய்விற்கு லஞ்சம் பெற்ற மருந்தாளுனர்
author img

By

Published : Oct 5, 2020, 3:11 PM IST

அந்த வீடியோவில், அரசு மருத்துவமனை ஊழியர், லஞ்சப்பணத்தை மிரட்டி கேட்டு வாங்குவதும், 'இரு சடலத்துக்கு குறைத்துக்கொள்ளுங்கள் குடும்பத்தாரிடம் பணம் இல்லை. அனுசரித்து பெற்றுக்கொண்டு நல்ல படியாக முடித்துத் தாருங்கள்' என உயரிழந்தவர்களின் உறவினர்கள் பேசுவதும் இடம்பெற்றுள்ளது. மேலும், வாங்கிய பணத்தை அவ்வர் தனது டேபிள் விரிப்புக்கு கீழ் வைப்பதும் பதிவாகியுள்ளது.

லஞ்சம் வாங்கும் மருந்தாளுனர்

இதுகுறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில், "அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்கு லஞ்சம் வாங்குவது வாடிக்கையாக உள்ளது. இரு உடல்களுக்கும் தலா ரூ. 1500 வீதம் 3 ஆயிரம் ரூபாயை மருந்தாளுனர் வாங்கியுள்ளார்" என்றனர்.

மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் சாந்தியிடம் இதுகுறித்து கேட்டபோது, "சம்பந்தப்பட்ட மருந்தாளுனர் மாதவன் மீது தலைமை மருத்துவ அலுவலர் மூலம் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்ட இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.