உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் வெளிவந்திருக்கும் இச்சூழலில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. வருகின்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த முறைகேடுகளை விசாரிப்பதற்கு தனி ஆணையம் அமைப்பதற்குக் கோரிக்கை வைக்க உள்ளேன்’ என்றார்.
மேலும், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறையற்ற செயலை செய்து அதிமுக கூட்டணி வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், இல்லாவிட்டால் படுதோல்வியை சந்தித்து இருக்கும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: களைகட்டும் கோவை விழா - கலக்க காத்திருக்கும் இயற்கை விசைப்படகுகள்!