திருப்பூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வாக்குச்சாவடிகள் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு வாக்குசாவடிக்கு அனுப்பும் பணியினை மாவட்ட தலைமைத் தேர்தல் அலுவலர் கே.எஸ்.பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படுவதோடு தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டு அவர்களும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.
மேலும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் கண்காணிப்புக் குழுவினருடன் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.