கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தச் சூழலில், வேலை இல்லாத காரணத்தால் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் மூன்று மாத கடன் கட்ட வேண்டியதில்லை என அரசு தெரிவித்திருந்தது.
![Tiruppur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7373612_104_7373612_1590603101915.png)
ஆனால், திருப்பூரில் மகளிர் சுய உதவிக்குழுவினுக்கு கடன் வழங்கிய மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் நிலுவைத் தொகையைக் கட்ட வலியுறுத்துவதாகவும், கூடுதல் வட்டி விதிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மகளிர் சுய உதவிக் குழுவினர் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க : நான் இருக்கேன்; இந்தியா - சீனா மத்தியஸ்தத்திற்கு முன்வந்த ட்ரம்ப்