திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பனியன் தொழிலாளி ஜாகீர் உசேன். இவரது மனைவி அசீனா பானு. இந்த தம்பதியின் இளைய மகன் முகமது பாயீஸ்(8) காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் தனது மகன் உயிரிழந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வேறு காரணங்களை சொல்வதாகவும், திருப்பூரில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த சிறுவனின் தந்தை தெரிவித்தார்.
மேலும் திருப்பூரில் டெங்குவால் பாதிக்கப்படும் மக்கள் பெரும்பாலும் கோவைக்குச் செல்வதாகவும், திருப்பூரிலேயே டெங்கு காய்ச்சலுக்கு தகுந்த சிகிச்சை கிடைக்க அரசு உரியமுறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலுக்கு அரியலூரில் பெண் உயிரிழப்பு