ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை - thieves break cupboard

திருப்பூர்: வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு
author img

By

Published : Feb 1, 2019, 4:40 PM IST

திருப்பூர் காங்கேயம் சாலை பொன்னம்மாள் லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகராக பணிபுரியும் நடராஜ். இவர் கடந்த புதன்கிழமை அன்று தனது மனைவி கண்ணம்மாள் மற்றும் மகள் தியாவுடன் கும்பகோணத்தில் உள்ள திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் நேற்று இரவு தங்கள் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நடராஜன், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 47 சவரன் நகை மற்றும் 81 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைரேகை மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வீட்டின் கதவை உடைத்த கொள்ளையர்கள் வீட்டின் அலமாரியில் வைத்து இருந்த பொம்மையின் கீழ் மறைத்து வைத்திருந்த சாவியையும் கண்டெடுத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை.

Body:திருப்பூர் காங்கேயம் சாலை பொன்னம்மாள் லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் நடராஜ் ரியல் எஸ்டேட் இடைத்தரகராக பணிபுரியும் இவர் கடந்த புதன்கிழமை அன்று தனது மனைவி கண்ணம்மாள் மற்றும் மகள் தியாவுடன் கும்பகோணத்தில் உள்ள திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றுள்ளார் அங்கு சுவாமி தரிசனம் முடிந்த நிலையில் நேற்று இரவு தங்கள் வீட்டிற்கு திரும்பி உள்ளனர் அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நடராஜன் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 47 சவரன் நகை மற்றும் 81 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது இதனையடுத்து அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் கைரேகை மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் வீட்டின் கதவை உடைத்த கொள்ளையர்கள் வீட்டின் அலமாரியில் வைத்து இருந்த பொம்மையின் கீழ் மறைத்து வைத்திருந்த சாவியையும் கண்டெடுத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

VISUAL IN FTP: TN_TPR_ 01 _ 1_ HOUSE THEFT NEWS _7204381

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.