ETV Bharat / state

ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என்ற பயம் அதிமுக அரசுக்கு இருக்கிறது- கனிமொழி எம்பி - விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்

கைத்தறிக்கு போடப்பட்டுள்ள ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசிடம் பேசினால் ஆட்சியை கலைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் அதிமுக அரசு இருப்பதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

tiruppur Dmk mp kanimozhi campaign
ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என்ற பயம் அதிமுக அரசுக்கு இருக்கிறது- கனிமொழி எம்பி
author img

By

Published : Feb 10, 2021, 6:43 PM IST

திருப்பூர்: விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் குமரலிங்கத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி இன்று பரப்புரையைத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து அவர் கொழுமம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அங்கும் பரப்புரை செய்தார்.

கைத்தறி ஜிஎஸ்டி குறித்து பேச அதிமுக அரசு அச்சம் கொள்கிறது- கனிமொழி

பின்னர் மாலையாண்டி பட்டிணத்தில் நெசவாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது,"கைத்தறிக்கும் விசைத்தறிக்கும் வித்யாசம் தெரியாமல் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்துப் பேசினால் மத்தியில் உள்ளவர்களுக்கு புரிந்து கொள்ளக்கூடிய திறன் இல்லை, இதுகுறித்துப் பேசவேண்டிய அரசு, ஜிஎஸ்டி குறித்து பேசினால் ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் எனும் பயத்தில் இருக்கிறது" என்றார்.

The AIADMK fears that the regime will be dissolved says kanimozhi mp
தடுக்கு பின்னிய கனிமொழி

ஜல்லிப்பட்டி, தினைகுளத்தில் தென்னை ஓலை தடுக்கு பின்னும் பெண் தொழிலாளர்களுடன் இணைந்து கனிமொழி எம்பி தடுக்குகளைப் பின்னினார். திருமூர்த்திமலைக்குச் சென்று அங்கு வாழும் பழங்குடியின மக்களையும் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: 'பழனிசாமிக்கு அது இருக்கு; ஸ்டாலினுக்கு இல்லை' - எஸ்.பி. வேலுமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.