ETV Bharat / state

ஒன்றியக்குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சங்கம் மனு - ஒன்றியக்குழு தலைவர் மீது நடவடிக்கை

திருப்பூர்: உதவி பொறியாளர்களை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்த வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

PWD
PWD
author img

By

Published : Nov 24, 2020, 12:15 PM IST

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பாஸ்கரன், ஜெகதீஷ், கோகுலசந்தான கிருஷ்ணன், லாவண்யா ஆகியோர் ஆயக்கட்டு விரிவாக்க காங்கேயம் உபகோட்டத்தில் உதவி பொறியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

நவம்பர் 20ஆம் தேதி அனைவரும் உபகோட்ட அலுவலகத்தில் வழக்கம்போல் பிரிவு அலுவலக பணிகளை கவனித்து கொண்டிருந்தனர். தற்போதைய சூழலில் காங்கேயம் வட்டத்துக்கு உட்பட்ட பிஏபி பாசன திட்ட பகுதிகளுக்கு இரண்டாம் மண்டல பாசனம் நடைபெற்று வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக பாசன சபை தலைவர்கள், பெரும்பாலான விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ள மதகுகளுக்கு ஷிப்ட் அடிப்படையில் தண்ணீர் வழங்கும் வழக்கத்தை மாற்றினர்.

அதன்படி 6 நாட்கள் ஷிப்ட் இல்லாமல் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று நவம்பர் 17ஆம் தேதி காங்கேயம் ஆயக்கட்டு விரிவாக்க உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சில விவசாயிகள் மனு அளித்தனர்.

மேலும் இதுதொடர்பாக வெள்ளக்கோவிலை சேர்ந்த வெங்கடேச சுதர்சன் (வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்) தலைமையில் 70க்கும் மேற்பட்டோர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு வந்து பிரச்னை செய்தனர்.

மேலும் சில விவரங்களுக்கு அலுவலக முத்திரையுடன் கையெழுத்து போட்டு கொடுக்கும்படி பிரச்னை செய்தனர். அந்த விவரங்களை உடுமலை திருமூர்த்தி கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி பெறும்படி உதவி செயபொறியாளர் அலுவலகத்தில் கூறினர். இதனை ஏற்காமல் அவர்கள் உதவி செயற்பொறியாளர்களை தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இவ்விவகாரத்தில் தகுந்த சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியும் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வேலைபார்க்கும் அணைவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில் காவல்நிலையத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.