கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் பொதுமக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டிலேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதன்காரணமாக பொதுமக்கள் செலுத்த வேண்டிய கடன்களுக்கான மாதாந்திர தொகையை ஆறுமாதங்களுக்குச் செலுத்த தேவையில்லை என மத்திய அரசு சலுகையை அறிவித்தது.
இந்த விதிமுறைகளை பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் ஏற்காமல், தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் காசோலைகளை செலுத்தி, காசோலைகளைத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதனால் ஒவ்வொரு முறையும் 590 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுவதாகவும்; ஒரு மாதத்திற்கு நான்கு முறை வரை காசோலைகளைத் திருப்பி அனுப்புவதால், மாதாந்திர கட்டணத்தைக் கடந்து காசோலைகளை திருப்பி அனுப்பும் கட்டணமே செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகவும்; வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து திருப்பூர் அவினாசி சாலையில் அமைந்துள்ள பஜாஜ் ஃபைனான்ஸ் அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பஜாஜ் ஃபைனான்ஸ் கட்டண சுமை விவகாரம்: முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்! - செக் பவுன்ஸ்
திருப்பூர்: அரசின் அறிவிப்பை மீறி, காசோலையைத் திருப்பி அனுப்பி, கட்டண சுமையை விதிப்பதாக வாடிக்கையாளர்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.