திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் குடியிருந்து வரும் விக்னேஷ்-புவனேஸ்வரி தம்பதியரின் மகள் வர்ஷா குமார். நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்றுவந்தார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல ஏழு மணிக்கு பள்ளிக்கு ஆட்டோ மூலம் சென்ற வர்ஷா, வகுப்பறைக்குச் சென்ற சற்று நேரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மாணவியை திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளித்தபின் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். பள்ளிக்கு சீக்கிரம் செல்லவேண்டும் என அவசர அவசரமாக வந்த சிறுமி வகுப்பறையிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.