கான்ட்ராக்ட் முறையில் சுகாதார பணிகளை விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுகாதாரத் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், நிரந்தரத் தொழிலாளர்களை நியமிக்கவும், சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கக் கோரியும் ஏஐடியுசி துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாநகராட்சி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோசங்களை எழுப்பினர்.