சென்னை: மணிகண்டன் நடித்துள்ள ’குடும்பஸ்தன்’ திரைப்படம் சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘குடும்பஸ்தன்’. நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த ராஜேஷ்வர் காளிசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். புதிய திருமணமான இளைஞர் தனது குடும்ப சூழலால் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெய் பீம், குட் நைட், லவ்வர் ஆகிய திரைப்படஙக்ள் மூலம் பிரபலமடைந்த மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வைசாக் இசையமைத்துள்ள இப்படம் நாளை (ஜன.24) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இன்று குடும்பஸ்தன் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட நிலையில், சமூக வலைதளத்தில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
#Kudumbasthan - ⭐️⭐️⭐️⭐️ . This year’s first content-driven quality blockbuster loading for Tamil cinema. Amazing work by @DirRajeshwark and writer Prasanna Balachandran. Their script work and dialogues evoke genuine laughter at the same time, move us emotionally in the climax.… pic.twitter.com/UZVrPDzXtM
— Rajasekar (@sekartweets) January 23, 2025
குடும்பஸ்தன் படத்தின் இணையதள விமர்சனத்தில், “இந்த வருடத்தின் முதல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் குடும்பஸ்தன். இந்த படத்தின் கதையை எழுதிய பிரசன்னா பாலசந்திரன் மற்றும் இயக்குநர் ராஜேஷ்வர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் நமக்கு இயல்பாக சிரிப்பை வரவைக்கிறது. அதேபோல் கிளைமாகஸ் காட்சியும் எமோஷனலாக உள்ளது.
#Kudumbasthan 👌🏻👌🏻👌🏻
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 23, 2025
Hilarious movie with super family emotions..
All middle class family will connect with the film...
Manikandan vera level...
Nakkalites team and Kongu slang 🤣🤣🤣
Theatres going to fill with family audience laugh sound.. 👍👍👍
BLOCKBUSTER
மணிகண்டன் தத்ரூபமான நடிப்பை வழங்கியுள்ளார். குரு சோமசுந்தரம், மலையாள நடிகர் குடசனாட் கனக்கம் ஆகியோரும் இப்படத்தில் நன்றாக நடித்துள்ளனர்” என கூறியுள்ளனர். மற்றோரு விமர்சனத்தில், "குடும்ப சென்டிமெண்ட் காட்சிகளுடன் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படம். அனைத்து மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். மணிகண்டன், நக்கலைட்ஸ் குழு வேற லெவல். குடும்பங்களை தியேட்டர்களில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும், பிளாக்பஸ்டர்” என பதிவிட்டுள்ளார்.
#Kudumbasthan [4/5] : WINNER!
— Ramesh Bala (@rameshlaus) January 23, 2025
A Hilarious and emotional movie about money or lack of it..
Whether u constantly face money issues or once in a while, either way u will relate to it.. @Manikabali87 continues to excel in whatever role he does.. @gurusoms is 👌…
அதேபோல் மற்றொரு விமர்சனத்தில், "நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். பெரிய பிரபலங்கள் இல்லாமல் இது போன்ற நல்ல பொழுதுபோக்கு படத்தை எடுத்ததே படக்குழுவினரின் சாதனையாகும். ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய வித்தியாசமான கதைகளை மணிகண்டன் தொடர்ந்து தேர்வு செய்து வருகிறார். அவருக்கு பாராட்டுக்கள்” என கூறப்பட்டுள்ளது. நடிகர் மணிகண்டன் தொடர்ச்சியாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருவதாக சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.