ETV Bharat / state

கூட்டு பாலியல் வன்புணர்வு: ஆறு பேர் மீது வழக்குப்பதிவு! - பாலியல் வன்புணர்வு செய்த ஆறு பேர்

திருப்பூர்: பல்லடம் அருகே அசாம் மாநில பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பாலியல் வன்புணர்வு செய்த மூன்று பேர் கைது

author img

By

Published : Oct 1, 2020, 10:49 AM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலுள்ள ஒரு அட்டை நிறுவனத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சல்கோவா அஞ்சல், பிரெமோஜோதி தூரி (22) தம்பதி வேலை செய்து வந்தனர். அப்போது திருப்பூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் இவர்களுக்கு அறிமுகமகியுள்ளார்.

உடுமலையில் வேலை குறைவாக இருந்ததால், ராஜேஸ்குமாரிடம் வேலை எதாவது வாங்கித் தரும்படி பிரெமோஜோதி தூரி கூறியுள்ளார். ராஜேஷ்குமார் நேரில் வர சொன்னதையடுத்து கடந்த 28 ஆம் தேதி திருப்பூர் வந்துள்ளார். பிரெமோஜோதி தூரிக்கு, சில இடங்களுக்கு நேரில் சென்று வேலை இல்லை என கூறிய பிறகு , தன்னை மீண்டும் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடும்படி ராஜேஷிடம் கூறியுள்ளார்.

ஆனால், ராஜேஷ்குமார் தன்னுடைய தம்பி ராஜூவுடன் இருசக்கர வாகனத்தில் செல்லுமாரு கூறியதையடுத்து, அவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால், ராஜூ, பேருந்து நிறுத்தம் செல்லாமல் உகாயனூர் அருகிலுள்ள பாறைக்குழிக்கு கூட்டிச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த ராஜூ-வின் நண்பர்களாகிய தமிழ் , தாமோதரன் , அன்பு , கவின் ஆகிய நான்கு நன்பர்களுடன் சேர்ந்து அசாம் மாநில பெண் பிரெமோஜோதியை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

மேலும், பிரெமோஜோதியின் செல்ஃபோன், பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனையடுத்து, பல்லடம் காவல் நிலையம் சென்று பிரெமோஜோதி, சம்பவம் குறித்து புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, தற்போது ராஜூ, அன்பு , கவின் ஆகிய மூன்று பேரையும் பல்லடம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்தவர்களிடமிருந்து ஒரு செல்ஃபோன், 2 ஆயிரம் ரூபாய் பணம் , ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள தமிழ் , தாமோதரன் , ராஜேஷ்குமார் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து வாட்ஸ்அப்பில் பரப்பிய சிறுவர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.