திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுக்கா திட்டுப்பாறை அருகே சிவியார்பாளையத்தில் அருள்மிகு பரமசிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 72.86 ஏக்கர் நிலம் உள்ளது.
அதில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 69.81 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளாக 19 பேர் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அவர்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் நால்ரோடு கிராமம், சாவடி என்ற ஊருக்கு தென்புறமாக சென்னிமலை - காங்கேயம் மெயின் ரோட்டுக்கு மேல்புறம் சுமார் 61 ஏக்கரும், ரோட்டுக்கு கீழ்புறம் சுமார் 9 ஏக்கருமாக உள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறநிலையத்துறையின் சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆக்கிரமிப்பு குறித்து கோவை அறநிலையத் துறையின் இணை ஆணையர் நீதிமன்றத்தில் 19 மனுக்களின் படி விசாரணையும் நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: பரமக்குடி அருகே இரு தரப்பினரிடையே மோதல்: வாகனங்கள் எரிப்பு, வீடுகள் சூறை