ETV Bharat / state

நீதிமன்ற வளாகத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நீதிபதி உத்தரவு! - திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர்: புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹி உத்தரவிட்டார்.

judge-orders-court-premises-to-be-made-available-to-the-public

author img

By

Published : Oct 19, 2020, 10:13 PM IST

திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு, ஆறாண்டுக்குப் பின்னர் தான் நீதித்துறையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்டவை தொடங்கப்பட்டன. ஆனால், இதற்கான உரிய கட்டடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதி எதுவுமில்லை. பனியன் நிறுவனம் செயல்பட்டு வந்த குறுகலான பகுதிக்குள், குறுகிய கட்டடத்தில் இவை இயங்கி வருகின்றன.

ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை அடுத்து, கடந்தாண்டு 2018 ஜூலை மாதம் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் பின்புறம், 10 ஏக்கர் நிலம், மாவட்ட நீதித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. அதில் 37 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது.

நீதிமன்ற கட்டடம் ரூபாய் 37 கோடி மதிப்பில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், 1 லட்சத்து 66 ஆயிரத்து, 441 சதுரடி பரப்பில் அமைகிறது. நீதிமன்றம், இரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ஆகிய மூன்று மாவட்ட நீதிமன்றங்கள், முதன்மை குற்றவியல் நீதிமன்றம், நான்கு ஜே.எம்., நீதிமன்றம் என எட்டு நீதிமன்றங்கள் அமைகிறது.

மேலும் அங்கு வந்து செல்வோர் வசதிக்காக எட்டு இடங்களில் லிப்ட்களும், எட்டு இடங்களில் படிக்கட்டுகளும் அமைக்கப்படுகிறது. அத்துடன் நீதிபதிகள் அறை, ஊழியர் அறை, தபால் நிலையம், பதிவு அறை, தலைமை எழுத்தர் அறை, இருப்பு அறை, அரசு வழக்கறிஞர்கள் அறை ஆகியவையும் அமைக்கப்பட்டு, இதன் கட்டுமானப் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

நீதிமன்ற வளாகத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நீதிபதி உத்தரவு

இதனையடுத்து இன்று (அக்.19) சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹி, புதிதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்றத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நீதிமன்ற வளாகம் எவ்வாறு அமைந்துள்ளது என்று பார்வையிட்டு கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, இது செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட நீதிபதி அல்லி அவர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ரம்மி விளையாட்டில் பணம் இழந்தவரின் சோக முடிவு! கடைசி நிமிடத்தில் மனைவிக்கு அனுப்பிய ஒலிப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.