இன்று காலை முதல் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
திருப்பூர் மாநகர பகுதிகள், புறநகர் பகுதிகளான காங்கேயம், ஊத்துக்குளி, பெருமாநல்லூர், அவிநாசி, தாராபுரம் மற்றும் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.