ETV Bharat / state

கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழுக்கள்! - திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையம்

திருப்பூர்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழுக்கள் இருந்ததாக பெண்ணுக்கு வேண்டப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

germicidal glucose
author img

By

Published : Nov 5, 2019, 9:13 PM IST

ஒடிசாவைச் சேர்ந்த ஜெகன் (28) என்பவர் தனது மனைவி தேவியுடன் (24), திருப்பூர் பழைய ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் மூன்று மாதம் கர்ப்பமாக உள்ள தேவியை அழைத்துக்கொண்டு புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

’கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழு’

அங்கு தேவிக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இதனை ஜெகன் சென்று பார்த்தபோது அதில் புழுக்கள், பஞ்சு போன்ற கிருமிகள் மிதந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மொழி பிரச்னை காரணமாக நண்பர் ஜோசபிடம் தெரிவித்துள்ளார்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்ததாகவும்; பொருளாதாரத்தில் பின்தங்கிய பலர் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்துள்ள நிலையில், இங்கு அலட்சியமாக மருத்துவம் பார்க்கப் படுவதாகவும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வேண்டப்பட்டவரான ஜோசப் குற்றம்சாட்டினார்.

கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் கிருமிகள்

இதனையடுத்து தேவிக்கு செலுத்தப்பட்டு வந்த குளுக்கோஸ் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மாநகர் நல அலுவலர் பூபதி அங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துவப் பொருட்களை ஆய்வு செய்தார். மேலும், பணியில் இருந்த மருத்துவர், செவிலியர்கள், பாதிக்கப்பட்டவரிடம் விசாரணை மேற்கொண்டு, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

வெள்ளகோவில் தம்பதி கொலை வழக்கில் குற்றவாளியின் மகள் கைது

Intro:திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்பட்ட குளுக்கோஸ் மருந்து கிருமிகள் இருந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு ஆய்வு மேற்கொண்ட மா நகர் நல அலுவலர் பூபதி துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி.Body:ஒடிசாவை சேர்ந்த ஜெகன் 28 என்பவர் தனது மனைவி தேவி 24 என்பவருடன் பழைய ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார் இவர் கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவரது உணவகத்தில் குடும்பத்துடன் பணியாற்றிவருகிறார் நிலையில் 3 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வந்துள்ளார் அங்கு இவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு உள்ளதுஇதனை ஜெகன் சென்று பார்த்த பொழுது அதில் புழு மற்றும் பஞ்சு போன்ற கிருமிகள் மிதந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து மொழி பிரச்சனை காரணமாக ஜோசபிடம் தெரிவித்துள்ளார் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்ததாகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பலர் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்துள்ள நிலையில் அலட்சியமாக மருத்துவம் பார்க்க படுவதாகவும் ஜோசப் குற்றம்சாட்டினார் இதனையடுத்து தேவிக்கு செலுத்தப்பட்டு வந்த குளுக்கோஸ் நிறுத்தப்பட்டது இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மா நகர் நல அலுவலர் பூபதி அங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துவ பொருட்களை ஆய்வு செய்தார் மேலும் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இடமும் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களிடம் பேசிய பின்னர் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். கர்ப்பிணி பெண்ணிற்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கிருமிகள் இருந்ததாக எழுந்த புகாரை அடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.