ETV Bharat / state

வாகன ஓட்டிகளை மிரட்டி அபராதம் வசூலித்த ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்!

திருப்பூர்: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதோடு மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளை மிரட்டி அபராதம் வசூலித்த ஆயுதப்படை காவலரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஆயுதப்படை காவலர்
author img

By

Published : Jun 14, 2019, 10:11 PM IST

திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 12ஆம் தேதி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பூம்புகார் நகர் பகுதியில் பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு, அந்த வழியே ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஒட்டிகளை வழிமறித்து அபராதம் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு அங்கிருந்த வாகன ஒட்டிகள் மறுப்பு தெரிவித்ததோடு, “காவலர் ஆகிய நீங்களே ஹெல்மெட் அணியாமலும், பதிவு எண் இல்லாத வாகனத்திலும் வந்து விதிமுறையை மீறியுள்ளீர்கள்” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு அவர் உயர் அலுவலர்களிடம் சிறப்பு அனுமதி வாங்கியுள்ளதாகவும், ஹெல்மெட் அணிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். அவர் சொன்னதை ஏற்காத வாகன ஓட்டிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அங்கிருந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்ஃபோனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

வாகன ஓட்டிகளை மிரட்டி அபராதம் வசூலித்த ஆயுதப்படை காவலர்

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி நடத்திய விசாரணையில், அவர் வாகன ஓட்டிகளை மிரட்டி அபராதம் வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

Intro:திருப்பூரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய ஆயுதபடை போலீஸ் சஸ்பெண்ட்
வைரலான விடியோவால் நடவடிக்கை.Body:திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பல்லடம் ரோடு பூம்புகார் நகர் பகுதியில் கடந்த 12 ம் தேதி மாலையில் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் ராதாகிருஷ்ணன் என்பவர் பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர் அவர் ரோட்டோரமாக தனி ஒருவராக நின்று கொண்டு அந்த வழியாக, ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை வழிமறித்துள்ளார். மேலும், அவர்களிடம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், அந்த போலீசிடம் ஹெல்மெட் இல்லை. அவரிடம் இருந்த இரு சக்கர வாகனத்தில் பதிவு எண் இல்லாததை பார்த்து சந்தேகம் அடைந்த வாகன ஓட்டிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நீங்களே ஹெல்மெட் அணியாமலும், வாகனத்தில் பதிவு எண் இல்லாமலும் வந்து விதிமுறையை மீறியிருக்கிறீர்கள். ஆனால் சாதாரண வாகன ஓட்டிகளிடம் மட்டும் எப்படி நீங்கள் ஹெல்மெட் அணியவில்லை என்று அபராதம் கேட்கலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அந்த ஆயுதப்படை போலீஸ் எனக்கு ஹெல்மெட் போட வேண்டிய அவசியம் இல்லை. நான் சிறப்பு அனுமதி வாங்கியுள்ளேன். என கூறி பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதத்தை அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சிறிது நேரத்தில் திருப்பூர் மக்களிடையே இந்த வீடியோ அடிப்படையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ராதாகிருஷ்ணன் உடுமலை சரகத்திற்குற்பட்ட குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியாற்றி வந்தார். அங்கு சில ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை திருப்பூர் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தனர். தற்போது மீண்டும் எல்லையை தாண்டி மாநகர போலீஸ் பகுதிக்குள் இருந்து ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் பிரச்சனைக்குறிய வகையில் வாகன ஓட்டிகளிடம் நடந்து கொண்ட வீடியோ வைரல் ஆகியுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.