ETV Bharat / state

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டம் உச்சநீதிமன்றத்தில் செல்லாது - பழ. கருப்பையா - காஷ்மீர்

திருப்பூர்: அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் நிறைவேற்றியுள்ள காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டம் உச்சநீதிமன்றத்தில் செல்லாது என்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான பழ கருப்பையா புத்தகத்தை வெளியிட்ட போது
author img

By

Published : Aug 27, 2019, 2:59 AM IST

திருப்பூர் மாவட்ட ஐக்கிய சுன்னத் ஜமாஅத் மற்றும் திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வரலாற்றில் வாழ்பவர்கள் எனும் புத்தக வெளியீட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ. கருப்பையா புத்தகத்தை வெளியிட்டார்.

பழ. கருப்பையா செய்தியாளர் சந்திப்பு

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"சுதந்திர போராட்டத்திற்காக இஸ்லாமியர்களும் இணைந்து இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தனர். மதம் காரணமாக தற்போது வேற்றுமைகளை வளர்ப்பதும் அவர்கள் வாழ்க்கை முறையில் குறிப்பிடுவதும் வீணான பகையை வளர்க்கும். காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் நுழைந்தது தேவையில்லாதது. 70 ஆண்டு காலம் இந்தியாவுக்கு விசுவாசமாக இருந்த மக்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்து விட்டது. காஷ்மீர், இஸ்லாமிய நாடான பாகிஸ்தானோடு சேராமல் இந்தியாவுடன் இணைந்தது பெருந்தன்மையானது. ஆனால் அதனை தவறு என அம்மக்கள் கருதக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது".

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான பழ கருப்பையா செய்தியாளர் சந்திப்பு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான பழ கருப்பையா செய்தியாளர் சந்திப்பு

மேலும், 370 பிரிவு என்பது இந்தியாவின் எல்லையோர மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கை மற்ற மாநிலங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என்றும், இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை முறைப்படி காஷ்மீர் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பின் ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்க வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் இந்த ரத்து சட்டம் உச்சநீதிமன்றத்தில் தோல்வி அடையும் என தெரிவித்தார்.

Intro:அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் நிறைவேற்றியுள்ள காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதா உச்சநீதிமன்றத்தில் செல்லாது என திருப்பூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா பேட்டி

Body:திருப்பூர் மாவட்ட ஐக்கிய சுன்னத் ஜமாஅத் மற்றும் திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வரலாற்றில் வாழ்பவர்கள் எனும் புத்தக வெளியீட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான பழ கருப்பையா புத்தகத்தை வெளியிட்டார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் சுதந்திர போராட்டத்திற்காக இஸ்லாமியர்களும் இணைந்து இந்த நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தனர் எனவும் ,மதம் காரணமாக தற்போது வேற்றுமைகளை வளர்ப்பதும் அவர்கள் வாழ்க்கை முறையில் குறிப்பிடுவதும் வீணான பகையை வளர்க்கும் எனவும் தெரிவித்தார்.காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் நுழைந்தது தேவையில்லாதது எனவும் 70 ஆண்டு காலம் இந்தியாவுக்கு விசுவாசமாக இருந்த மக்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்து விட்டதாகவும் காஷ்மீர் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானோடு சேராமல் இந்தியாவுடன் இணைந்தது பெருந்தன்மையானது. ஆனால் அதனை தவறு என அம்மக்கள் கருதக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.370 பிரிவு என்பது இந்தியாவின் எல்லையோர மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது தற்போது காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கை மற்ற மாநிலங்களுக்கு ஆச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா முறைப்படி காஷ்மீர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு இருக்க வேண்டும் அது செய்யாத பட்சத்தில் இந்த மசோதா உச்சநீதிமன்றத்தில் தோல்வி அடையும் எனவும் தெரிவித்தார்.மேலும் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் கொடுமையானது எனவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.