ETV Bharat / state

'ரஞ்சித் படத்தை புறக்கணியுங்கள்' - ஹெச். ராஜா - ரஞ்சித்

திருப்பூர்: சாதிய கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் படங்களை புறக்கணிக்குமாறு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Raja
author img

By

Published : Jul 28, 2019, 11:09 PM IST

திருப்பூரில் துக்ளக் பத்திரிகையின் வாசகர் குழு சார்பில் துக்ளக் தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக - காங்கிரஸ் கூட்டணி பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றிபெற்றுள்ளது. ஆனால், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரே வெற்றிபெறுவார். எந்தவொரு வரலாற்று சான்றும் ஆதாரமும் இல்லாமல் சாதிய கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் இயக்குநர் பா.ரஞ்சித் படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

'ரஞ்சித்தின் படத்தை புறக்கணியுங்கள்'

எஸ்.ரா.சற்குணம், மோகன்.சி.லாசரஸ் உள்ளிட்ட மதமாற்றும் தீய சக்திகளின் கைப்பாவையாக பா.ரஞ்சித் செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் மலைக்கிராம, ஏழை எளிய மக்கள் கல்வி அறிவு பெறுவதை எதிர்ப்பவர்கள் ஆவார்கள். கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு தற்போதுள்ள பெரும்பான்மையே போதும்" என்றார்.

Intro:எந்தவொரு சான்றும் , ஆதாரமும் இல்லாமல் சாதிய கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் இயக்குனர் பா.ரஞ்சித்தின் படங்களை புறக்கணித்து பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும் என திருப்பூரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி.Body:திருப்பூரில் துக்ளக் பத்திரிக்கையின் வாசகர் குழு சார்பில் துக்ளர் தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் திமுக காங்கிரஸ் கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றனர் எனவும் ஆனால் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவார் எனவும் , எந்தவொரு வரலாற்று சான்றும் , ஆதாரமும் இல்லாமல் சாதிய கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் , எஸ்ரா.சற்குணம் , மோகண்.சி.லாசரஸ் உள்ளிட்ட மதமாற்றும் தீய சக்திகளின் கைப்பாவையாக பா.ரஞ்சித் செயல்படுவதாக சந்தேகம் எழுவதாகவும் , புதியகல்விக்கொள்கையை எதிர்ப்பவர்கள் மலைக்கிராம , ஏழை எளிய மக்கள் கல்வி அறிவு பெறுவதை எதிர்ப்பவர்கள் எனவும் கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு தற்போதுள்ள பெரும்பான்மையே போதும் எனவும் பேட்டியளித்தார் .
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.