திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான தெரு விளக்குகளைப் பராமரிக்கும் வாகனம் காங்கேயம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் வேகமாக வந்து, இந்த வாகனத்தின் பின்னால் மோதினர்.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த பெரிய தோட்டத்தைச் சேர்ந்த கரீம், குண்ணங்கல்காடு பகுதியைச் சேர்ந்த கரண் ஆகிய இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் இருவரின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.