திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட போயம்பாளையம் வடிவேல் நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் அதேப் பகுதியில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள், ரூ.10ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இன்று காலையில் வழக்கம்போல் கதிர்வேல் பீரோவைத் திறந்து பார்த்த போது, நகை மற்றும் பணம் கொள்ளைபோயிருப்பது தெரியவந்தது. இதேபோல் அவரது பக்கத்து வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.