ETV Bharat / state

'மக்களவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்' - ஆனந்தன் நம்பிக்கை!

திருப்பூர்: "மத்தியிலும் மாநிலத்திலும் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ள சாதனை மூலமாக வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம்" என, திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.எம்.ஆனந்தன்
author img

By

Published : Mar 18, 2019, 10:35 PM IST

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான எம்.எஸ்.எம் ஆனந்தனுக்கு இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். இதனையடுத்து அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

"மத்தியிலும் மாநிலத்திலும் பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு செய்துள்ளது. எனவே, அந்த சாதனைகளை கொண்டு, வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம். இது வெற்றி கூட்டணி ஆகும். திருப்பூர் தொழில் சார்ந்த பகுதி ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் நகரம். எனவே இந்த தொகுதியை மேலும் மேம்படுத்தவே நோக்கம்", என்றார்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் திருப்பூரில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

இதனையடுத்து அப்பகுதியில் குழுமியிருந்த தொண்டர்களிடையே அவர் பேசும்பொழுது, கூட்டணிக் கட்சிகளின் பெயர்களை மறந்து, அருகில் இருந்தவர்களிடம் கேட்டு பேசி வந்தார். அதிமுக கூட்டணிக் கட்சிகளின் பெயர்களை அதிமுக வேட்பாளரே சொல்ல திணறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொண்டர்கள் மத்தியில் சிறிது சலசலப்பையும் ஏற்படுத்தியது.

மத்தியிலும் மாநிலத்திலும் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம் அந்த சாதனைகளை கொண்டு இத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேட்டி.
அதிமுக கூட்டணிக் கட்சிகளின் பெயர்களை சொல்லவும் அதிமுக வேட்பாளர் திணறல்
வேட்பாளர் அறிவிப்பு மற்றும் பிரச்சாரம் துவங்கியதையடுத்து தொண்டர்கள் உற்சாக நடனத்திலும் ஈடுபட்டனர்

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான எம் எஸ் எம் ஆனந்தனுக்கு இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்து கொண்ட எம் எஸ் எம் ஆனந்தன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரச்சாரத்தை துவக்கினார் இதனையடுத்து அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் எம் எஸ் எம் ஆனந்தன் மத்தியிலும் மாநிலத்திலும் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம் அந்த சாதனைகளை கொண்டு இத்தேர்தலில் வெற்றி பெறுவோம். இது வெற்றி கூட்டணி.இன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி மூலம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. திருப்பூர் தொழில்சார்ந்த பகுதி ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் நகரம் எனவே இந்த தொகுதியை மேலும் மேம்படுத்தவே இதே பகுதியை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். என தெரிவித்தார்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் திருப்பூரில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார் இதனையடுத்து அப்பகுதியில் குழுமியிருந்த தொண்டர்களிடையே பேசும்பொழுது கூட்டணிக் கட்சிகளின் பெயர்களை மறந்தும் அருகில் இருந்தவர்களிடம் கேட்டும் பேசி வந்தார் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் பெயர்களை அதிமுக வேட்பாளரை சொல்ல திணறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.