திருப்பூர் மாவட்டம் ஈஸ்வரன்கோவில் வீதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூ மார்க்கெட் வளாகம் உள்ளது. இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான 107 கடைகளில் பூ கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த மார்க்கெட் அரை ஏக்கர் பரப்பளவில், 94 கடைகளுடன் செயல்படுகிறது. 'சீர்மிகு நகரம்' திட்டத்தில் மார்க்கெட் வளாகத்தை முற்றிலும் இடித்து அகற்றிவிட்டு, 14 கோடி ரூபாய் மதிப்பில், கான்கிரீட் கூரையுடன் 86 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, உடனடியாக கடைகளை காலி செய்யும்படி வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பழைய மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. இதனிடையே பொங்கல் பண்டிகை முடியும்வரை வியாபாரிகள் கடைகளை காலிசெய்ய தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து, கால அவகாசம் முடிந்த நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் இன்று காவல் துறை பாதுகாப்புடன் மாநகராட்சிக்கு சொந்தமான 107 பூ கடைகளை ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு இடித்தனர்.
இதையும் படிங்க: தண்ணீர் வாளிக்குள் மூழ்கி ஒரு வயது குழந்தை இறப்பு; சோகத்தில் உறவினர்கள்