ETV Bharat / state

3 மணி நேர போராட்டம் வீண்... சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்

திருப்பத்தூர்: பாலாற்றில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

death body Recovery from Palar river
Palar river
author img

By

Published : Dec 23, 2020, 8:33 PM IST

Updated : Dec 23, 2020, 8:41 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நடுபட்டரை பகுதியில் இன்று (டிச.23) காலை அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர் இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார். அப்போது பாலாற்று நீரில் இறங்க முற்படும்போது கால் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கியுள்ளார்.

உடனடியாக அப்பகுதி மக்கள் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கியுள்ள ராஜனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 9 அடிக்கு மேலாக தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் சிக்கிய அவரை மீட்க முடியாமல் மூன்று மணி நேரம் போராடி பின்னர் அவரை சடலமாக மீட்டனர்.

இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கண்ணுக்கு எட்டியவரை நெரிசல்! காதுகளை கிழிக்கும் இரைச்சல்!

Last Updated : Dec 23, 2020, 8:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.