ETV Bharat / state

அரசு அலுவலகத்தில் அம்பேத்கர் படம் வைக்க வலியுறுத்தல்... - Dr Ambedkar

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் அம்பேத்கர் படம் வைக்க வலியுறுத்தி விடுத்லை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அலுவலகத்தில் அம்பேத்கர் படம் வைக்க கோரிக்கை.. விசிகவினரின் நடவடிக்கை என்ன?

author img

By

Published : Dec 6, 2022, 1:24 PM IST

திருப்பத்தூர்: மாதனூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல மாதங்களாக அம்பேத்கர் படம் வைக்க விடுதலை சிறுத்தை கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கையை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (டிச.6) அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி, அரசு அலுவலர்களை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் இருந்து அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்திய விசிகவினர், கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அரசு அலுவலகத்தில் அம்பேத்கர் படம் வைக்க கோரிக்கை.. விசிகவினரின் நடவடிக்கை என்ன?

மேலும் மாதனூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்ற விசிகவினர், அங்கு அம்பேத்கர் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் நினைவு நாள் இன்று

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.