கரோனா வைரஸ் தடுப்பில் முக்கியப் பங்காற்றும் முகக்கவசங்கள், கைகளைச் சுத்தம் செய்ய தேவைப்படும் கிருமிநாசினிகளை மருந்தகங்கள் அதிக விலைக்கு விற்பனைசெய்வதாக வரும் புகாரைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள (திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை) மொத்தம் ஆயிரத்து 600 மருந்தகங்களில் அந்தப் பகுதி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், மூலம் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதிக விலைக்கு முகக்கவசம் விற்றதாக காட்பாடியில் உள்ள சக்தி மருந்தகத்திற்கு மூன்று நாள் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள வாசன் மருந்தகத்தில் கிருமிநாசினிகள் காலாவதி ஆகியதாகக் கூறி அவற்றை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் கூறுகையில், ”மேலும் இந்தச் சோதனைகள் தொடரும், புகார் உறுதிசெய்யப்படும்பட்சத்தில் உடனடியாகக் கடைக்குச் சீல்வைக்கப்படும்” என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கு: விழுப்புரத்தில் முழு ஆதரவு