கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கோவிட் - 19 என்ற கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 6,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்த வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்கள் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் என்ற நிலைத் தகவல்களாக வைரஸ் பாதிப்புக்குள்ளாகி, இத்தனை பேர் அனுமதி, இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.
![Thiruppathur police alerted to rumors of coronavirus](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-01-fake-corona-news-vis-scr-tn10018_15032020050826_1503f_1584229106_50.jpg)
கொரோனா வைரஸ் குறித்து பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பதிவிட்டு வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த திவாகர் என்ற இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என அவரது புகைப்படத்தை போட்டு பொய்யான தகவல் பரப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘பேராசிரியருக்கு நானும் மகன்தான்’ - படத்திறப்பு விழாவில் ஸ்டாலின் உருக்கம்