ETV Bharat / state

திருடப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை ரூ.10ஆயிரம் கொடுத்து மீட்ட பெண்! - owner recovered his own vehicle in ambur

திருடப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை 10ஆயிரம் ரூபாய் கொடுத்து மீட்ட அதிர்ச்சி சம்பவம் திருப்பத்தூரில் அரங்கேறியுள்ளது.

கொள்ளையடித்தவரின் கடனை செலுத்தி சொந்த வாகனத்தை மீட்ட உரிமையாளர்!

author img

By

Published : Jul 16, 2022, 8:19 PM IST

திருப்பத்தூர: ஆம்பூரில் கடந்த ஜூன் 21ஆம் தேதி சுதா என்பவர் ரயில் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தில் பயணச்சீட்டு வாங்குவதற்காக வந்துள்ளார். பயணச்சீட்டு வாங்கிய பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

அதேநேரம், சுதாவும் வாகனத்தை பல இடங்களில் தனது உறவினர்கள் மூலமாக தேடி வந்தார். இந்நிலையில், திருப்பத்தூர் அருகே சுதாவின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற திருடன், சுதாவே அவரது உறவினர்கள் மூலம் கண்டுபிடித்தனர். பின்னர், அந்த வாகத்தை வைத்திருந்தவரிடம் கேட்டபோது, அந்த திருடன் தனது கடனை திருப்பிச் செலுத்துவதற்கு பதிலாக இந்த வாகனத்தை 10ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்தது தெரியவந்தது.

பின்னர் அந்நபரிடம் இது தனது இருசக்கர வாகனம் தான் எடுத்துச் செல்வதாக கூறியுள்ளார். ஆனால், அந்நபர் 10ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்திருப்பதாகவும், அந்த பணம் கொடுத்தால் தான் வாகனத்தை திருப்பி தருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது வாகனத்தை சுதா 10ஆயிரம் ரூபாய் கொடுத்து மீட்டார். இவ்வாறு திருடனின் கடனை திருப்பிச் செலுத்தி, தனது இருசக்கர வாகனத்தை மீட்டு வந்த சம்பவம் அனைவரது மத்தியில் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தேனி விவசாயியை குறிவைத்து ஆன்லைன் மோசடி - இருவரைக் கைது செய்த சைபர் கிரைம் போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.