ETV Bharat / state

திருப்பத்தூரில் தாயார் இறந்த செய்தி கேட்டுத் துக்கம் தாளாமல் உயிரிழந்த மகன்

author img

By

Published : Dec 8, 2021, 10:53 PM IST

ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு, பழைய மனைப் பகுதியில், தாய் இறந்த துக்கம் தாளாமல்  மகனும் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தாயார் இறந்த செய்தி கேட்டு துக்கம் தாளாமல் உயிரிழந்த மகன்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகில் துத்திப்பட்டு பழையமனை பகுதியைச் சேர்ந்தவர், ஞானப்பிரகாசம் (லேட்).

இவருக்கு ஞானமேரி (70) என்கிற மனைவியும் ஜெசி, சசி, சுசி என்கிற 3 மகள்களும், பிலீப் குமார் என்கிற மகனும் உள்ளனர்.

மூன்று பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில், பிலீப் குமாருக்கும் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள ஷர்மிளா என்பவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில், தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த பிலீப் குமாரின் தாயார் ஞானமேரி உடல் நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 08) உயிரிழந்துள்ளார் .

தாய் இறந்த சோகம் தாளாமல் உயிரிழந்தார்:

பிலீப் குமாரும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், தாயார் இறந்த செய்தி கேட்டு மருத்துவமனையிலிருந்து தாயைப் பார்க்க வந்தபோது, துக்கம் தாளாமல் மீண்டும் உடல் நிலை நலிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கச் சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துத் தகவலறிந்து வந்த உமராபாத் காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தனர்.

பிலீப் குமார், தாயாரின் உடலை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நல்லடக்கம் செய்த பின்னர் இன்று(டிசம்பர் 8) பிலீப் குமாரின் உடலை மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குன்னூர் விரைந்தார்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.