திருப்பத்தூர்: வெங்களாபுரம் அடுத்த அனேரி கிராமம் பகுதியில், பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முட்புதரில் வீசி சென்றுள்ளனர்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு, ஓடிவந்த அந்த பகுதி மக்கள் குழந்தையை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். தற்போது குழந்தை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களுக்கு வலைவீச்சு
மேலும் மேல் சிகிச்சைக்காக குழந்தை, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பத்தூர் காவல் துறையினர், குழந்தையை முட்புதரில் வீசி சென்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை: மாமனார் மீது பெண் புகார்