திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் உள்ள பெருமாள் கோவில் மற்றும் ஓம் சக்தி கோவில் உள்ளது. இதில் பெருமாள் கோவில் பார்த்திபன் என்பவரும், ஓம் சக்தி கோவில் லோகநாதன் என்பவரும் நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அமாவாசை என்பதால் இரு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் முடித்து கொண்டு நிர்வாகிகள் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து மீண்டும் இன்று காலை கோவில் திறப்பதற்காக வந்து பார்த்தபோது, கோவிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உண்டியல் மற்றும் சாமி அலங்கார பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் அம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இதேபோன்று ஓம் சக்தி கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலில் இருந்த உண்டியலில் உள்ள பணம் மற்றும் பூஜை பொருட்களை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக பெருமாள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளை அடித்து செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.
உடனடியாக சிசிடிவி காட்சிகளை கொண்டு பார்த்திபன் மற்றும் லோகநாதன் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து இக்கொள்ளைச்சம்பவம் குறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோவில் கொள்ளையில் ஈடுப்பட்ட இளைஞரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:முதல்வரின் தனிப்பிரிவில் அளித்த மனுவை வாபஸ் வாங்கு.. மிரட்டும் காவலரின் ஆடியோ ரிலீஸ்..