திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது வீட்டிற்குள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இன்று (மார்ச் 3) புகுந்தது.
அதைக் கண்ட வேல்முருகன் ஆம்பூர் வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் மலைப்பாம்பை பொதுமக்கள் ஒன்றிணைந்து பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த வனத் துறையினரிடம் மலைப்பாம்பை அவர்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து ஊட்டல் காப்புக் காட்டில் மலைப்பாம்பு பத்திரமாக விடப்பட்டது.
இதையும் படிங்க: கருவூல அலுவலகத்துக்குள் புகுந்த நாகப்பாம்பு: ஊழியர்கள் அலறி ஓட்டம்