லாரியில் ஆம்பூர் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆம்பூர் தனி வட்டாச்சியர் குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிவட்டாச்சியர் தலைமையிலான அலுவலர்கள் திருப்பத்தூர் - வேலூர் மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேலூரிலிருந்து ஆம்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அலுவலர்கள் லாரியை பின்தொடர்ந்து மாதனூர் அடுத்த குளித்திகை பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.
ஆனால், லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து லாரியில் சோதனை மேற்கொண்டபோது லாரியில் 18 டன் மதிப்பிலான ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
பின்னர் லாரியை பறிமுதல் செய்த அலுவலர்கள் ஆம்பூர் வட்டாச்சியர் பத்மநாபனிடம் ஒப்படைத்தனர்.