திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று 10 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் அரசு அலுவலர்கள் கரோனா தடுப்புப் பணிகளைத் தீவீரமாக மேற்கொண்டு வருகின்றனர்
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து காவல் துறையினர் இரவு பகல் பாராமல் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
ஆனால், நகர்புறத்தில் மற்றும் கிராமப்புறத்தில் சிலர் இருசக்கர வாகனத்தில் தேவையின்றி ஊரைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றனர். பொதுமக்களுக்கு அரசு மற்றும் காவல் துறையினர் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் வாகனங்களில் தேவையற்று சுற்றிவருகின்றனர்.
அவ்வாறு சுற்றித் திரிந்தவர்களை தோப்புக்காரணம் போடவைத்த திருப்பத்தூர் காவல் துறையினர், தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் நோயாளிகளுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை - அமைச்சர் வீரமணி