திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்திற்குள்பட்ட 7 ஊராட்சிகளில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பேசியதாவது, "அரசுப் பள்ளி மாணவர்களை தன்னுடைய குழந்தைகள்போல நினைத்து அவர்களுக்கு காலணி வழங்கும் திட்டத்தினை கொண்டுவந்தவர் ஜெயலலிதா.
அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக சீருடை காலணி அணிந்து செல்லும்போது ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் தெரியாமல் காட்சியளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதிமுக அரசுதான் என்றைக்குமே பிறக்கும் குழந்தை முதல் முதியவர் வரை பல்வேறு பயன்பெறும் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: 'முகக் கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு'