தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு செப்டம்பர் 24 ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஊட்டல் பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில், விஜயகாந்த் கரோனா தொற்றிலிருந்து குணமடைய வேண்டி அக்கட்சியின் தொண்டர்கள் மொட்டையடித்து வேண்டுதல் நடத்தினர்.