ETV Bharat / state

குடும்ப பிரச்சனை: மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் தற்கொலை

திருப்பத்தூர் அருகே குடும்ப பிரச்சனையால் மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் விரக்தியில் தற்கொலையால் உயிரிழந்தார்.

மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் தற்கொலை
மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் தற்கொலை
author img

By

Published : Jul 25, 2022, 12:03 PM IST

திருப்பத்தூர்: வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (37). இவருக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் நொண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த கிருத்திகா என்பவருடன் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் செல்வகுமார் மாதனூர் - ஒடுகத்தூர் சாலையில் மருந்து கடை நடத்தி வரும் நிலையில், செல்வகுமார் குடும்ப பிரச்சனை காரணமாக சில மாதங்களாக தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் விரக்தியடைந்த செல்வகுமார் நேற்று மாலை மாதனூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டு, அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் கிணற்றில் இருந்து செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையால் மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் விரக்தியில் தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாதனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருவள்ளூர் அருகே விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.