ETV Bharat / state

நாட்றம்பள்ளியில் போலி  போலீஸ்காரர் கைது! - Fake policeman arrested

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே காவலர் போல நடித்து, கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பில் இருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாட்றம்பள்ளியில் போலி காவலர் கைது  போலி காவலர் கை  கள்ள நோட்டு கும்பல்  Fake policeman arrested at Natrampalli  Fake policeman arrested  Fake Currency Arrest
Fake policeman arrested at Natrampalli
author img

By

Published : Feb 5, 2021, 7:49 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் சுங்கச்சாவடி அருகேயுள்ள டீக்கடையில் நேற்று (பிப். 04) இரவு காவலர் உடை அணிந்து வந்த ஒருவர் தான் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் எனக் கூறியுள்ளார். இந்த தகவல் நாட்றம்பள்ளி காவல் நிலையம் வரை வேகமாக பரவியது. இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உண்மையான காவலர்களை பார்த்ததும் தப்பி ஓடமுயன்ற போலி காவல் ஆய்வாளரை, பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவலர்கள் விசாரணை செய்தனர். அதில், அந்த நபர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ்(55) என்பதும், இவருக்கு கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முருகதாஸ் ஒரு நபரை தானே ஏற்பாடு செய்து நடுத்தர மக்களிடம் நெருக்கமாக பழக வைப்பார். அவர்களுடைய பணத்தேவைகளை பயன்படுத்தி அந்த நபர் என்னிடத்தில் ஒருவர் இருக்கிறார், அவரிடம் ஒரு லட்சம் கொடுத்தால் நமக்கு இரண்டு லட்சமாக கொடுப்பார். 5 லட்சம் கொடுத்தால் 10 லட்சமாக உடனே கொடுத்து விடுவார் என்று ஆசை வார்த்தைக் கூறி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்வார்.

இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு பணத்தை மாற்றச் செல்லும் போது, காவலர் வேடத்தில் அந்த இடத்திற்கு வரும் முருகதாஸ், இது தரப்பினரையும் மிரட்டி எச்சரித்து அனுப்பி விட்டு மொத்தப் பணத்தையும் அவரே எடுத்து வந்துள்ளார். இதுபோல் சுமார் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவத்தின் போது, தப்பியோடிய இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலியை நண்ப‌னுட‌ன் சேர்ந்து கொலைசெய்தவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.