திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகேவுள்ள பூசனைக்காய் வட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி சுரேஷ். இந்நிலையில் சுரேஷின் ஐந்து வயது மகன் சனீஸ், அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் மீன் இறந்து கிடப்பாதாக கூறி பார்த்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்டறம்பள்ளி தீயணைப்புத் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தடையை மீறி அருவிக்கு செல்லும் இளைஞர்கள்!