ETV Bharat / state

கொடுத்த கடனை திருப்பி வாங்க முடியாமல் தவித்த வங்கி மேலாளர் தர்ணா போராட்டம்

திருப்பத்தூர் அருகே கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியாமல், கடன் வாங்கியவர் கடையின் முன்பு அமர்ந்து இந்தியன் வங்கி மேலாளர் தர்ணாவில் ஈடுபட்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 13, 2023, 10:52 PM IST

தர்ணாவில் ஈடுபட்ட வங்கி மேலாளர்

திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், அருணகிரி (47). இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கச்சேரி தெருவில் உள்ள இந்தியன் வங்கியில் சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இவர், விஷமங்கலம் பகுதியில் அருணகிரி டிரேடர்ஸ் என்ற ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் இந்த கடையை அவருடைய தம்பியான பிரபாகரன் என்பவரும் வழி நடத்தி வருகிறார்.

ஆனால், இதுவரை வட்டியுடன் சேர்த்து 1 கோடியே 75 லட்சம் ரூபாய் ஆகியுள்ளது. ஆனால், வட்டி தவணையை 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலுத்தியுள்ளார். இந்த நிலையில் இந்தியன் வங்கியின் மூலம் பலமுறை பணத்தை வசூல் செய்ய அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால், பணத்தை இதுவரை செலுத்தாததாலும் வட்டியை கட்டவில்லை என்பதாலும் பலமுறை நோட்டீஸ் மற்றும் நேரில் வந்து பணத்தை கட்டச்சொல்லியும் வங்கி அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

ஆனால், வங்கி அதிகாரிகளுக்கு முறையான பதிலும் அதேபோல் ‘பணத்தை கட்ட முடியாது. உங்களால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று கூறியதன் காரணமாக, இன்று பணம் கேட்க வந்த இந்தியன் வங்கி மேலாளர் ஏமன் குமார் காலை சுமார் 11 மணி அளவில் இருந்து தற்போது வரை தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் ’பணத்தை வாங்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்’ எனவும்; வங்கி மேலாளர் தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கியின் தரப்பில் இருந்து தான், கடன் பெற்றவர்களுக்கு குடைச்சல் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால், வங்கிக்கு பணத்தைக் கட்ட முடியாமல் குடைச்சல் கொடுத்த சம்பவம் திருப்பத்தூரில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வியாசர்பாடியில் மாமூல் கேட்டு அட்டகாசம் செய்த 4 ரவுடிகள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.