திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நஜர் முகமது, நேற்று (மார்ச்.31) ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாதனுர் மேற்கு ஒன்றியத்திலுள்ள வடச்சேரி, மலையாம்பட்டு, தென்னம்பட்டு, வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தனது ஆதரவாளர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் வீதி வீதியாக திறந்த வேனில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அதிமுக தொண்டர்கள், கிராம மக்கள் சார்பில், வேட்பாளர் நஜர் முகமதுவுக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியிலுள்ள டீக்கடை ஒன்றில் வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர் நஜர் முகமது, டீ போட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்த சம்பவம் பொதுமக்கள், தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இப்பரப்புரையில், மாதனுர் மேற்கு ஒன்றியக் கழக செயலர் பொறியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: 'ஒரு மாசமா எதுவும் பறிமுதல் செய்யவில்லை' - விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஆணையர்