திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பாக அமைக்கப்பட்ட அதிநவீன சிடி ஸ்கேன் மையத்தின் திறப்பு விழா நடந்தது.
இதில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே சி வீரமணி கலந்துகொண்டு அதிநவீன சிடி ஸ்கேன் மையத்தை திறந்துவைத்தார்.
இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் இதற்கு முன்பு பல அதிநவீன கருவிகளை பொதுமக்களின் சிகிச்சைக்காக கொண்டு வந்திருக்கிறோம். அதனைத் தொடர்ந்து தற்போது அதிநவீன சிடி ஸ்கேன் இயந்திரத்தை கொண்டு வந்து அதற்கான மையத்தை திறந்து வைத்திருக்கிறோம்.
இதையடுத்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, ஆம்பூர் அரசு மருத்துவமனை, வாணியம்பாடி நகர்புற சுகாதார நிலையம், மாதனூர் சமுதாய சுகாதார நிலையம், கெஜல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் கோவிட்-19 தடுப்பு மருந்து ஒத்திகையை ஆய்வு நடத்தினார்.
இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், அரசு மருத்துவமனை எம் ஓ டாக்டர் திலீபன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கேஜி ரமேஷ், நகர செயலாளர் டி டி குமார், முன்னாள் மாவட்ட பெருந்தலைவர் நீலா சுப்ரமண்யம், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: எச்ஐவி நோய் குணப்படுத்தும் மருந்து சித்த மருவத்தில் உள்ளது- சித்த மருத்துவர் தில்லைவாணன்