ETV Bharat / state

திருப்பத்தூரில் 18 டன் ரேசன் அரிசி பறிமுதல்! - லாரியில் கடத்திக்கொண்டுவரப்பட்ட ரேசன் அரிசி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள குடோனில் வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 18 டன் ரேசன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள்
author img

By

Published : Nov 17, 2020, 1:53 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அகரம்சேரி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் குடோனில் இருந்து வெளிமாநிலத்திற்கு கடத்த 2 லாரிகளில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு வடக்கு மண்டல டிஎஸ்பி ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அந்த தனியார் குடோனில் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் தீடீர் சோதனை மேற்க்கொண்டனர்.

அப்போது இரண்டு லாரிகளில், 18 டன் எடைக்கொண்ட அரிசி மூட்டைகள் பதுக்கி வைப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதனை கைப்பற்றிய காவல் துறையினர் அரிசி மூட்டைகளை கீழ்முருங்கை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மளிகை கடையில் மாமூல் கேட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.